ஈழமணித்திரு நாடு
அது எழில் பெரும் மாங்கனித்தீவூ
சோலைக்குயில் என நாளும்
கூரை கடல் அலை கவிப்படும்
குண திசை கடலிடை முகத்து
குவித்திடும் அலைகடல் பரப்பு
அதனிடை வளர்ந்து கூடம்
அதுவே எங்கள் மாடம்
மருதமும் நெய்தலும் இணையும்
உயர் மனிதனின் நேசங்கள் குவியும்
கதிர் பெரும் செந்நெல் விளையும்
கார் கடலிடை மீனினம் துள்ளும்
மாணவ மணிகள் வாரீர்
இங்கு மகத்துவம் நிலைபெற செய்வீர்
காணுறு உயர் தொழினுள்ளே
கற்றலை உயர் வீதாய் கொள்வீர்.
அன்புடன் ஒற்றுமை படுவோம்
அவனியில் மனிதத்தை வளர்ப்போம்
தேசியம் இங்கு வளர
தினம் தினம் இறை பதம் தொழுவோம்
இலங்கை துறை முகத்தூரில்
இயங்கிடும் இந்துக்கல்லூரி
ஏற்றம் முறு நிலை காண
இறைவா அருளது புரிவாய்